மழை வெள்ளத்தில் 2 பேருடன் சிக்கிய ஆம்னி வேனை, ஜேசிபி உதவியுடன் மீட்ட போலீசாருக்கு பாராட்டு..!

தெலங்கானாவில் கரைபுரண்டோடும் மழை வெள்ளத்தில் 2 நபர்களுடன் சிக்கிய ஆம்னி வேனை ஜேசிபி கொண்டு போலீசார் மீட்டனர்.
கனமழையின் காரணமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. லஸ்கர்குடாவாகு பகுதியில் 2 நபர்களுடன் வந்த ஆம்னி வேன் ஒன்று கரைபுரண்டோடும் மழை வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற அப்துல்லாபுர்மேடு போலீசார் ஜேசிபியின் உதவியோடு பாய்ந்து ஓடும் வெள்ள நீரில் இருந்து ஆம்னி வேனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
— Rachakonda Police (@RachakondaCop) October 17, 2020
Comments