நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு

0 1588
நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு

இரு வேறு சமூகங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்தும் விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கடும் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருவேறு மத கலைஞர்களுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறார் என்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றும் நபர்களை போதைக்கு அடிமையானவர்கள் என அவதூறு பரப்பி வருவதாக நடிகை கங்கனா மீது மனுதாரர் சாஹில் புகார் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில், கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments