ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினரிடம் சுமார் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
19 வயது தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கு விசாரணையை அங்கிருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
Comments