ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

0 937
ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு 253 பேர் பலியான நிலையில், அந்நாட்டின், மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஈரான் நாட்டில், அண்மை நாட்களாக, வகைதொகையின்றி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில், பெருந்தொற்று பரவல் வேகமெடுத்திருப்பதால், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மசூதிகள், கடைகள், உணவகங்கள் ஹோட்டல்கள், ஜிம் உள்ளிட்டவற்றை, மூட ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments