தங்கம் விலை குறைய காரணம் என்ன ?

0 13359
தங்கம் விலை குறைய காரணம் என்ன ?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 1464 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று 4863 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று 183 ரூபாய் குறைந்து 4680 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று 38904 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 1464 ரூபாய் குறைந்து, 37,440 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலையும் கிலோவுக்கு இன்று 400 ரூபாய் குறைந்து 65400 ரூபாய்க்கு விற்பனையானது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கம் மீதான முதலீட்டை குறைத்து டாலர் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தங்கம் விலை குறைந்து உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments