ஜெ.மரண வழக்கு : அப்போலோ சார்பில் மேல்முறையீட்டு வழக்கால் விசாரணை தாமதம் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம்

0 1233
ஜெ.மரண வழக்கு : அப்போலோ சார்பில் மேல்முறையீட்டு வழக்கால் விசாரணை தாமதம் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம்

உச்சநீதிமன்றத்தில், அப்போலோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம் ஆவதாக, தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆறுமுகசாமி ஆணையத்திற்கான கால அவகாசம் வருகிற 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில், ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில், அப்போலோ தொடுத்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தாமதமாவதாகவும், இதனால், குறித்த காலத்திற்குள், விசாரணையை முடிக்க இயலவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments