நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்பட்டன

0 1235
நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்பட்டன

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதையடுத்து, திருத்தம் செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது.

திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3536 என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில்,  தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 889 ஆக குறிப்பிடப்பட்டது.

மாநில தேர்ச்சி விகிதத்திலும் ஏற்ற இறக்கம் என பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

அதன்பின்னர் சில மணி நேரத்தில் புள்ளிவிவர பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கான புள்ளிவிவரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments