மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கங்கணா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு

0 1565
மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கங்கணா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு

மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மதக்கலவரத்தை தூண்ட முயன்றதாக எழுந்த புகாரில் நடிகை கங்கணா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் பதிவுகள் மற்றும் பேட்டிகள் மூலம், திரைக் கலைஞர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் மத அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவதாக கங்கணா மற்றும் அவரது சகோதரி Rangoli Chandel மீது புகார் எழுந்தது.

பகைமையைத் தூண்டுவது, தீய உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை தூண்டுவது, தேச துரோகம் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்டிரேட், கங்கணா சகோதரிகள் மீதான புகார் குறித்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments