அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் சுமார் 14 மணி நேரம் நீடித்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ருபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.
Comments