நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது

0 1249
நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது

நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, கடந்த 6 மாதங்களில் முதன்முறையாக 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

ஒரே நாளில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 74 லட்சத்தை கடந்துள்ளது.

இதில், நேற்று மட்டும் 70 ஆயிரத்து 816 பேர் குணம் பெற்று வீடு திரும்பியதைடுத்து, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 95 ஆயிரமாக குறைந்து, முன்னேப்போதும் இல்லாத வகையில் 10 புள்ளி 70 சதவீதமாக உள்ளதென மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குணம் பெற்று வீடு திரும்பியவர்கள் விகிதம் 87.8 சதவீதமாகவும், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.5 சதவீதமாகவும் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments