கேரளாவில் புற்றிங்கல் கோயில் விழா தீ விபத்தில் 110 பேர் பலியான சம்பவம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு கேரள போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

0 784
கேரளாவில் புற்றிங்கல் கோயில் விழா தீ விபத்தில் 110 பேர் பலியான சம்பவம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு கேரள போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரள மாநிலம் புற்றிங்கல் கோயில் விழா தீ விபத்தில்  110 பேர்  பலியான சம்பவத்தில், 4 ஆண்டுகளுக்கு பிறகு 59 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

2016ம் ஆண்டு  நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியின்போது பயங்கர வெடி விபத்தும், பின்னர் தீ விபத்தும் நேரிட்டது. 

இந்த சம்பவத்தில் பரவூர் நீதித்துறை நடுவர் முதல்வகுப்பு நீதிமன்றத்தில் 15 கோயில் அதிகாரிகள்  உள்ளிட்ட 59 பேர் மீது 11 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் 533 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கொலை மற்றும் அனுமதியில்லாமல் பட்டாசுகளை கையாண்டது, பொது சொத்துகளை சேதபடுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments