அஜர்பைஜனின் கஞ்ச் நகரம் மீது ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 பேர் பலி: அர்மேனியா இத்தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜன் குற்றச்சாட்டு

0 492
அஜர்பைஜனின் கஞ்ச் நகரம் மீது ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 பேர் பலி: அர்மேனியா இத்தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜன் குற்றச்சாட்டு

அஜர்பைஜனின் இரண்டாவது பெரிய நகரான கஞ்ச் மீது ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர்.

அர்மேனியா இத்தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜன் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ரஷ்யாவின் சமாதான முயற்சியின் பேரில் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதும் மீண்டும் யுத்தம் நீடித்து வருகிறது.

இருநாட்டுப் படையினரும் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான மோதலில் ஈடுபட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று ராக்கெட் வீசித் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments