பிரபல சங்கீத வித்வான் பி.எஸ்.நாராயணசாமி காலமானார்

பிரபல சங்கீத வித்வான் பி.எஸ்.நாராயணசாமி காலமானார்
பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பி.எஸ். நாராயணசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர் செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்பட மிகப்பெரிய இசை மேதைகளிடம் கர்நாடக இசையைப் பயின்றார்.பல ஆயிரம் இசை மாணவர்களை உருவாக்கிய ஆசானாகவும் அவர் விளங்கினார். பத்மபூஷண், சங்கீத கலா ஆச்சார்யா உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் நாராயணசாமி.
Comments