கேரள தங்கக் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் மருத்துவமனையில் அனுமதி

0 1351
கேரள தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் திடீரென திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்.ஐ.ஏ. மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு சிவசங்கர் ஆஜராகும்படி சுங்க இலாகா துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகளும் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments