வங்கக் கடலில் உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

0 6802
வங்கக் கடலில் உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments