7 மாதங்களுக்குப்பின் தமிழகத்தில் ஓடிய ஆம்னி பேருந்து : பயணிகள் வருகை குறைவு

0 2186
தமிழகத்தில், 7 மாத இடைவெளிக்குப்பின், தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

தமிழகத்தில், 7 மாத இடைவெளிக்குப்பின், தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதற் கட்டமாக 400 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், அதிகாலை முதல் ஓடத் துவங்கின. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

பயணிகளிடம் டிக்கெட் கட்ட ணம் கூடுதலாக 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன்தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments