தொடரும் மழையால் கர்நாடகத்தின் 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு

0 1396
வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த மாநிலத்தின் கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் மாவட்டங்களே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

அந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். பீமா, கிருஷ்ணா, கட்டபிரபா, மல்லபிரபா, துங்கபத்ரா, நாராயணபுரா ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பா காணோலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments