புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை தொடங்கியது காங்கிரஸ்

0 1553
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியை அக்கட்சி மேலிடம் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியை அக்கட்சி மேலிடம் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததையடுத்து பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையிலும் தேர்தல் நடத்தக்கோரி கடிதம் எழுதியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் தேர்தல் குறித்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் இறுதி செய்யப்பட்டதாகவும், இதன்படி அனைத்தும் நடந்து முடிந்தால் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments