பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவ.26-ம் தேதி தொடங்கும்-அண்ணா பல்கலைக்கழகம்

0 57466
பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பருவத் தேர்வு அக். 28-ந் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இணைய தள கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என்றும், பருவத் தேர்வை தள்ளி வைக்கவும் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று, பருவ தேர்வு நடைபெறும் தேதியை தள்ளிவைத்து திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு பருவத்துக்கான இறுதி வேலை நாள் நவம்பர் 13-ந் தேதியுடன் முடிவடையும், நவம்பர் 17 முதல் செய்முறைத் தேர்வுகளும், நவம்பர் 26-ந் தேதி முதல் எழுத்துத் தேர்வு தொடங்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments