குடும்பத் தகராறு வழக்கு இருந்தாலும் கணவர் வசிக்கும் வீட்டில் தங்க மனைவிக்கு உரிமையுண்டு: உச்சநீதிமன்றம்

குடும்பத் தகராறு வழக்குகள் இருந்தாலும், கணவர் வாழும் கூட்டு குடும்ப வீட்டில் தங்கியிருக்கும் உரிமை மனைவிக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், அவருடைய கணவருக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இருப்பினும் கணவர் வாழும் வீட்டில் தங்கியிருக்க அனுமதிகோரி அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஆனால் அந்த வீடு தங்களுக்கு சொந்தமானது எனவும், ஆதலால் வீட்டில் தங்கியிரக்க அவரை அனுமதிக்கக் கூடாது, அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மாமனார், மாமியார் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இதன் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வீட்டின் மீது கணவருக்கு சட்டரீதியில் உரிமையில்லை என்றாலும் சரி அல்லது அந்த வீடு மாமனார், மாமியார் பெயரில் இருந்தாலும் சரி, கணவர் வாழும் வீட்டில் தங்கியிருக்க மனைவிக்கு உரிமையுண்டு என்று தீர்ப்பளித்தனர்.
Comments