பணமோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கில், சிபிஐ விசாரணை கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

0 1773
பணமோசடி புகாரில் விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கில், சிபிஐ விசாரணை கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தன்னிடம் பணமோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகர் சூரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சிபிஐ -க்கு மாற்றக்கோரி அவர், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக சூரி தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.

ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments