உடலை கூட அருகில் பார்க்க முடியவில்லையே... கதறி அழுத வெற்றிவேல் மனைவி

0 8228
உடலை கூட அருகில் பார்க்க முடியவில்லையே... கதறி அழுத வெற்றிவேல் மனைவி

கொரோனா பாதித்து உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடலை அருகே சென்று பார்க்க முடியாததால், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பால்கனியில் இருந்து பார்த்து கதறியது காண்போரை கலங்க வைத்தது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த அவரது உடல் வாகனம் மூலம் கீழ்ப்பாக்கம் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. கொரோனாவால் இறந்ததால், வாகனத்தில் இருந்து உடல் கீழே எடுத்து வரப்படவில்லை. இதனால் பால்கனியில் இருந்தபடி குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர்.

இதையடுத்து ஓட்டேரியிலுள்ள மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் வராதபோதும், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments