திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்கள் வெளியாகவில்லை...ரசிகர்களும் குறைவாகவே வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடின

0 1333
திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்கள் வெளியாகவில்லை...ரசிகர்களும் குறைவாகவே வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடின

டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், வாரணாசி, அமிர்தசரஸ் போன்ற பல நகரங்களில் திரையரங்குகள் நேற்று 7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட போதும் ஒரு புதிய பாலிவுட் படம் கூட திரைக்கு வரவில்லை.

அனைத்துத் திரையரங்குகளிலும் பிரதமர் மோடியின் பயோ- பிக் உள்ளிட்ட பழைய படங்களே திரையிடப்பட்டன.

டெல்லியில் ஒரு திரையரங்கில் நான்கு பேர் மட்டும் படம் பார்க்க வந்தனர்.

நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றின் மூலம் புதிய படங்கள் திரையிடப்படுவதால், ரசிகர்கள் வருவார்களா என திரையரங்கு உரிமையாளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments