மகாராஷ்ட்ராவில் கனமழையால் 27 பேர் உயிரிழப்பு - வீதிகளில் வெள்ளப்பெருக்கு

0 502
மகாராஷ்ட்ராவில் கனமழையால் 27 பேர் உயிரிழப்பு - வீதிகளில் வெள்ளப்பெருக்கு

மகாராஷ்ட்ராவில் பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மும்பை, புனே, தானே உள்ளிட்ட பல நகரங்களில் அணைகளும் நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக நகரங்களின் வீதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதில் சோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 27 பேரில் 16 பேர் சோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ள வானிலை மையம் மும்பை புனே உள்ளிட்ட நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments