தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு பின் ஓடத் தொடங்கிய ஆம்னி பேருந்துகள்...

0 1932
தமிழகத்தில் ஆறு மாதங்களுக்கு பின் ஓடத் தொடங்கிய ஆம்னி பேருந்துகள்...

தமிழகத்தில் சுமார் 6 மாதங்களுக்குப் பின், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 175 நாட்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி, இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என, பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

முதற்கட்டமாக, தமிழக உரிமம் பெற்ற சுமார் 500 பேருந்துகள் அதிகாலை முதலே இயங்கத் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments