சீனாவுக்குத் தலையிட உரிமையில்லை- ஜெய்சங்கர் எச்சரிக்கை

0 3225
சீனாவுக்குத் தலையிட உரிமையில்லை- ஜெய்சங்கர் எச்சரிக்கை

இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது. இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் படைகளைத் திரும்பப்பெறவும் பதற்றத்தைத்தணிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் ரகசியமானவை என்றும் அதனை வெளியிட இயலாது என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புளூம்பர்க் பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க தாம் விரும்பவில்லை என்றும் கூறினார். பேச்சுகள் தொடரும் நிலையில் சீனா இதுவரை ஒப்புக்கொண்டபடி படைகளை விலக்கிக் கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் லடாக் எல்லையின் மீது சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், அண்டை நாடுகள் இந்தியாவின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments