ஸ்ரீநகர் - லே சாலையை இணைக்க 14.2 கி.மீ. தூரத்திற்கு குகைப்பாதை..கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார் நிதின்கட்காரி

0 865
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து லே பகுதி வரையிலான சாலையை இணைக்கும் விதத்தில் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் குகைப்பாதை, இந்திய ராணுவத்திற்கு புதிய வலிமை சேர்க்க உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து லே பகுதி வரையிலான சாலையை இணைக்கும் விதத்தில் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் குகைப்பாதை, இந்திய ராணுவத்திற்கு புதிய வலிமை சேர்க்க உள்ளது.

அந்த குகைப்பாதை கட்டுமானப் பணியை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி துவக்கி வைத்தார். 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 10 ஆயிரத்து 640 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் சோஜில்லா குகைப்பாதை பணிகளை, 6 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக 3 மணி நேர பயண நேரம் 15 நிமிடமாக குறையும். இது தொடர்பாக பேசிய கார்கில் மாவட்ட ஆணையர், இதன் மூலம் லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற இருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments