நிஜ டால்பின்களுக்கு விடுதலையளிக்க ரோபோ டால்பின்..விலை ரூ.190 கோடி மட்டுமே..!

0 704

டால்பின்களைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கடலில் பார்த்தாலும் சரி, தண்ணீர் தொட்டிகளில் பார்த்தாலும் சரி... நம்முள் ஒருவித பரவசம் குடிகொள்ளும். அதனாலேயே பல்வேறு பூங்காக்கள் டால்பின்களைத் தொட்டியில் அடைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்த டால்பின்களை விடுவிப்பதற்கென்றே, அமெரிக்காவைச் சேர்ந்த எட்ஜ் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனம் ரோபோ டால்பின்களை உருவாக்கியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களுக்குப் பயன்படுத்தப்படும் அனிமேட்ரோனிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எட்ஜ் நிறுவனம் ரோபோ டால்பினை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோட டால்பின் நாம் பேசினால் தலையாட்டி ஆமாம் சொல்லும், மீன்களுடன் சேர்ந்து நீந்தும், நம்முடன் நெருங்கிய தொடர்புடன் இருக்கும்.

தண்ணீர் தொட்டியில் வளர்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ரோபோட் டால்பின் பார்ப்பதற்கும், தொடுவதற்கும் அப்படியே உண்மையான டால்பினைப் போன்றே இருக்கும். சுமார் 250 கிலோ  எடையுள்ள ரோபோட் டால்பினின் தோல் தரமான மெடிக்கல் சிலிக்கனால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த டால்பினின் விலை தான் தலைசுற்றும்படி உள்ளது. ஒரு டால்பின் ரோபோட்டின் விலை சுமார் 190 கோடி ரூபாயாகும்!

எட்ஜ் இன்னோவேஷன் நிறுவனர் வால்ட் காண்டி, ”பொதுமக்களுக்கு டால்பின்களுடன் பழகி, அவற்றை நேசிக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதற்காக, அந்த ஆசையை நிறைவேற்றிவைக்க உலகம் முழுவதும் 3000 டால்பின்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.ரோபோட் டால்பின்களால் தொட்டிக்குள் சிறைப்பட்டுள்ள டால்பின்கள் விடுதலைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments