OTT -ல் ஆபாச காட்சிகளை கண்காணிக்க சுதந்திர அமைப்பு-மத்திய அரசுக்கு நோட்டீஸ்

0 1212

OTT வாயிலாக ஒளிபரப்பப்படும் வீடியோக்களில், பொருத்தமற்ற ஆபாசமான காட்சிகளை கண்காணித்து தடை செய்வதற்கான சுதந்திர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தாக்கலான மனுவில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வழக்கறிஞர்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், இந்த வீடியோக்களில் வரம்பு மீறிய வன்முறை, ஆபாச காட்சிகள், அருவருக்கத்தக்க பேச்சுக்கள், புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உரிய கண்காணிப்பு அமைப்பு இல்லாததால், கொச்சையான வசனங்களும், கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான காட்சிகளும் OTTயில் மலிந்து விட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்,யுப் டிவி, ஹங்கமா பிளே. யூ டியூம், முகநூல் உள்ளிட்டவை மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments