இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் ரூ.3.33 லட்சம் கோடி இழப்பு..!

0 766
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

13 ஆண்டுகளில் இல்லாத அளவாக தொடர்ந்து 10 நாட்களாக ஏற்றம் கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று 1066 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 39 ஆயிரத்து 728 புள்ளிகளில் நிறைவுற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 290 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 680 புள்ளிகளில் நிலை கொண்டது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், நிதி துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றதே சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments