அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 2372
அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வு,"நெல்லை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது வேதனையானது என்று தெரிவித்தனர்.

விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும்,அதற்கு காரணமான நெல் கொள்முதல் நிலைய அதிகாரியிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர், நாளை உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments