தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி... கடலுக்குள் பாய்ந்து காப்பாற்றிய காவலர்!

0 4988

புதுச்சேரி கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதை பொதுமக்கள் பாராட்டு.

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பாண்டியன் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த சமயத்தில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதை நேரில் கண்டார். உடனே சுதாரித்துக் கொண்ட பாண்டியன் கடலுக்குள் குதித்து மூதாட்டியை உடனடியாக வெளியே இழுத்து வந்ந்தார்.

எனினும், கடல் நீரை குடித்ததால், மூதாட்டி மயக்கமடைந்தார். தொடர்ந்து, பாண்டியன் தன் கைகளில் அந்த மூதாட்டியை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் மூதாட்டி உயிர் பிழைத்துக் கொண்டார்.

புதுச்சேரி தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments