இந்தியா வரும் மேலும் 4 ரபேல் விமானங்கள்..!

0 5434
ரபேல் விமானங்களின் அடுத்த பேட்ச் இன்னும் சில வாரங்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பான நிலைமையை ஆராய விமானப்படை அதிகாரிகள் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

ரபேல் விமானங்களின் அடுத்த பேட்ச் இன்னும் சில வாரங்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பான நிலைமையை ஆராய விமானப்படை அதிகாரிகள் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

36 ரபேல் விமானங்களை, 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்சிடம் இருந்து வாங்க கடந்த 2016 ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் முதல்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அம்பாலா வந்தடைந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மூன்று அல்லது நான்கு ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு சில வாரங்களில் வரும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 3 அல்லது 4 விமானங்கள் வருவதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா விமானங்களும் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையில் சீனாவுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ரபேல் விமானங்களின் வருகை விமானப்படையின் போர்த்திறனை பலமடங்கு அதிகரிக்கும்.

ரேடார் எச்சரிக்கை கருவிகள், 10 மணி நேரத்திற்கும் அதிகமாக டேட்டாக்களை சேகரித்து வைக்கும் வசதி. இன்ஃபரா ரெட் சர்ச், டிராக் சிஸ்டம், கோல்டு எஞ்சின் ஸ்டார்ட், ஏவுகணை எதிர்ப்புத் திறன், மலைப்பாங்கான தளங்களில் இருந்து இயக்கும் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரபேலில் உள்ளன. தரையில் இருந்தும் கப்பலில் இருந்தும் பறந்துயரும் திறனுள்ள ரபேல் அணு ஆயுதங்கள் உள்பட 10 டன் ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை உள்ளதாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments