சென்னையில் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ஸ்மார்ட் கம்பங்கள்..

0 1181
சென்னையில் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அலாரம், சிசிடிவி கேமரா வசதியுடன் கூடிய 1605 ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்படவுள்ளன.

சென்னையில் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அலாரம், சிசிடிவி கேமரா வசதியுடன் கூடிய 1605 ஸ்மார்ட் கம்பங்கள் பொருத்தப்படவுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகளாக 617 இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பெண்கள் ஏதேனும் இடையூறுகளை சந்திக்க நேரிடும் போது, அது குறித்து உடனடியான போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேமரா, அலாரம், அவசர கால உதவி பொத்தான் மற்றும் உதவி எண்கள் ஆகிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்படவுள்ளன.

நெருக்கடியை சந்திக்க நேரிடும் பெண்கள் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள அவசர கால உதவி பொத்தானை அழுத்தினால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிடும். 2018-ல் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments