நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே குளிர்சாதன ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0 1191
தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு மேலாக தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. புதிய விதிமுறைகளால், குளிர்சாதன வசதியுடன் கூடிய 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த நிலையில், நாளை முதல் தமிழக பதிவு எண் கொண்ட 950 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments