அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை இடித்து 400 மீட்டர் வரை இழுத்துச் சென்ற கார்

0 17406
டெல்லியில் அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை, சுமார் 400 மீட்டர் வரை காரின் முன்பகுதியில் இழுத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை, சுமார் 400 மீட்டர் வரை காரின் முன்பகுதியில் இழுத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். தவுலா குவானில் இருந்து திலக் நகரை நோக்கி அதிவேகமாக சென்ற கரை, போக்குவரத்து போலீசார் நிறுத்த முயன்றனர்.

அப்போது மெதுவாக சாலையோரம் ஒதுங்கிய அந்த கார், திடீரென வேகமெடுத்து, முன்னால் நின்ற போக்குவரத்து காவலர் மஹிபால் சிங் யாதவை இடித்து தள்ளியபடியே சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது.

இதில், போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் சக போலீசார் காரை துரத்தி பிடித்து ஓட்டுநர் சுபம் என்பவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments