வனப்பகுதியில் நடைபயணம் சென்ற இளைஞரை விடாமல் விரட்டியடித்த மலைச்சிங்கம்

0 2368
வனப்பகுதியில் நடைபயணம் சென்ற இளைஞரை விடாமல் விரட்டியடித்த மலைச்சிங்கம்

அமெரிக்காவில் வனப்பகுதியில் நடைபயணம் சென்றவரை மலைச் சிங்கம் விடாமல் விரட்டியடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

உட்டா மாகாணத்தில் வனப்பகுதியில் கெய்ல் பர்கஸ் என்பவர் நடைபயணமாகச் சென்ற போது மலைச்சிங்கத்தின் குட்டிகளைக் கண்டார்.

அவரைக் கண்ட மலைச்சிங்கம் கெயிலை எதிர்கொண்டதால், அவர் பின்னோக்கி நகர்ந்தார். ஆனாலும் நீண்ட தூரம் கெயிலை பின்வாங்கச் செய்த பின்னரும் ஒருகட்டத்தில் அவரை தாக்க முயற்சிப்பதுபோல பயமுறுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மலைச்சிங்கத்தை போகுமாறு சப்தமிட்டுக் கொண்டே வந்தார்.

இறுதியில் கீழே கிடந்த கல் ஒன்றை அதன் மீது வீசி அதனை விரட்டியடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments