கண்களைக் கட்டிக் கொண்டு தேங்காய் உடைப்பதில் உலகசாதனை படைத்த கராத்தே வீரர்

0 857
கண்களைக் கட்டிக் கொண்டு தேங்காய் உடைப்பதில் உலகசாதனை படைத்த கராத்தே வீரர்

ஆந்திராவைச் சேர்ந்த கராத்தே வீரர் ஒருவர் கண்களைக் கட்டிக் கொண்டு தேங்காய் உடைப்பதில் உலக சாதனை படைத்துள்ளார்.

நெல்லூரைச் சேர்ந்த கராத்தே வீரர் பிரபாகர் ரெட்டி என்பவர் வினோதமான உலக சாதனை படைக்க விரும்பினார். அதற்காக தனது கண்களில் உப்பை வைத்து கட்டிக் கொண்டு, மாணவர் ராகேஷ் பாயில்லா என்பரைப் படுக்க வைத்தார்.

ராகேஷைச் சுற்றி தேங்காயை வைத்த அவர் சுத்தியால் வரிசையாக தேங்காய்களை உடைத்தெறிந்தார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் ராகேஷைச் சுற்றியிருந்த 49 தேங்காய்களை ஒரு நிமிடத்தில் உடைத்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments