கேரள தங்கக் கடத்தலுக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு- தேசியப் புலனாய்வு முகமை தகவல்

0 2547
கேரள தங்கக் கடத்தலுக்கு தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு- தேசியப் புலனாய்வு முகமை தகவல்

கேரள தங்கக் கடத்தல் வழக்குக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் உள்ளிட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்கள் மீது கொச்சி நீதிமன்றத்தில் விசாரணையின் போது இதனை தெரிவித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவ்வழக்கில் முழுமையான விசாரணை நடத்த 180 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

தாவூத்தின் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக இந்த தங்க கடத்தல் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments