ஒரு லட்சம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இறக்குமதிக்கு டெண்டர் வெளியீடு: சுமார் ரூ.700 கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

0 643
ஒரு லட்சம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இறக்குமதிக்கு டெண்டர் வெளியீடு: சுமார் ரூ.700 கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான டெண்டரை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கினாலும், அடுத்து வரும் பண்டிகை மற்றும் குளிர்காலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் தேவையை கருத்தில் கொண்டு திரவ ஆக்சிஜன் இறக்குமதி செய்ய, சுகாதார அமைச்சகம் சார்பில் சர்வதேச டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 700 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments