மருத்துவ ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்காதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கொரோனாவிற்காக கண்டறிந்த "இம்ப்ரோ" மருந்தை வைராலஜி சோதனைக்கு உட்படுத்தி முடிவுகளை தருவிக்க உத்தரவிடக் கோரி, வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு ஆராய்ச்சியாளரை ஊக்குவிக்கும் முறை இது தானா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியர்கள் யாராவது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா? என்றும் வினவினர்.
மருந்து தொடர்பான ஆய்வறிக்கையை அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
Comments