யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

0 1560

நீலகிரி மாவட்டத்தில், யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள்  கட்டப்பட்டுள்ளன.

இவற்றை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வுசெய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்தும் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments