ஆளில்லா குட்டி விமானங்களை அழிக்க இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி

0 3868
இந்திய ராணுவ வீர ர்களுக்கு ஆளில்லா குட்டி விமானங்களை அழிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆளில்லா குட்டி விமானங்களை அழிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் மாநில எல்லையில் குட்டி விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீச பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அத்தகைய குட்டி விமானங்களை அழிப்பது குறித்த பயிற்சி ராணுவ வீர ர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் பணியில் ஈடுபடும் வீர ர்களுக்கு 14 நாட்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு 28 நாட்களும் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக ராணுவ பயிற்சி பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments