தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவை நன்கு தெரியும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒப்புதல்

0 3692
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவை தமக்கு நன்றாக தெரியுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவை தமக்கு நன்றாக தெரியுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமீரக துணைத்தூதர் பலமுறை தமது வீட்டுக்கு வந்தது உண்மைதான் என்றார்.

அவருடன்  செயலாளர் என்ற முறையில் சொப்னாவும் வந்ததால்,  அவரை நன்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டார். சொப்னாவுக்கும், சிவசங்கருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சபரிமலை கோவிலில்,  ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கும் நடைமுறை மண்டல காலத்திலும் பின்பற்றப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments