உச்ச வரம்பின்றி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

0 574
உச்ச வரம்பின்றி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

எவ்வித உச்சவரம்பும் இன்றி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யுமாறு, தமிழக அரசை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை, முழு மையாக வாங்க மறுப்பதாக அறிக்கையொன்றில் கண்டனம் தெரிவித்துள்ள அவர், தேவையான எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மறுபரிசீலனை செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments