தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 19541

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படுமா? என்பது குறித்து  பதில் அளிக்குமாறு கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா எதிரொலியாக பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கும் நிலையில், கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அது தொடர்பாக  இன்று நடந்த விசாரணையில் 32 சிபிஎஸ்சி பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 40 சதவிகித கட்டணத்தை செலுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகள் எப்போது திறக்கும் என தெரியாது என்பதால் எஞ்சிய கட்டணத்தையும் வசூலிக்க அனுமதிக்குமாறு தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டது. வழக்கு விசாரணை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments