இலங்கையில் கொலைகள்; காஞ்சியில் பதுங்கல்; ஓசூரில் கைது! - சிக்கிய தாதா கட்டகாமினி

0 12115

லங்கையில் பல கொலைகளில் தொடர்புடைய தாதா கட்டகாமினியை ஓசூரில் காஞ்சிபுரம் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இலங்கையில் பல கொலை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய தாதா கட்டகாமினி என்கிற பொன்சேகா அங்கிருந்து சில மாதங்களுக்கு முன் தப்பினான். தமிழகத்துக்குள் நுழைந்த கட்டகாமினி காஞ்சிபுரம் அருகேயுள்ள புதுப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்தான். இங்குள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் மக்களுடன் மக்களாக கடந்த 6 மாத காலமாக வசித்து வந்துள்ளான். கட்டகாமினிக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட சர்வதேச போதை கடத்தல் கும்பல்களுடன் நேரடித் தொடர்பு உண்டு.image

 இலங்கை போலீஸார் கேட்டுக் கொண்டதையடுத்து கட்டகாமினியை தமிழக போலீஸாரும் தேடி வந்தனர். இந்த நிலையில், கட்டகாமினி புதுப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கட்டகாமினியை போலீஸார் நெருங்கிய சமயத்தில் கடைசி நேரத்தில் அவன் பெங்களுருக்கு தப்பி விட்டான். இதையடுத்து காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார் பெங்களூருவில் கட்டகாமினியை தேடி வந்தனர். இந்த நிலையில், ஓசூர் அருகே லாட்ஜில் பதுங்கியிருந்த கட்டகாமினியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது, கட்டகாமினியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால், கட்டகாமினி தமிழகத்துக்குள் புகுந்து மறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே. தமிழகத்தில் அங்கோடலொக்கா எனும் இலங்கை தாதா கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அங்கோடலொக்காவின் கூட்டாளிதான் கட்டகாமினி என்பது குறிப்பிடத்தக்கது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments