நடத்தையில் சந்தேகம் - மனைவி, மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்.. பக்கத்து வீட்டுக் குழந்தை தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்

0 2997
நடத்தையில் சந்தேகம் - மனைவி, மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்.. பக்கத்து வீட்டுக் குழந்தை தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்

சேலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி மற்றும் மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அருகில் இருந்த பக்கத்து வீட்டின் 3 வயது குழந்தை தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தது.

தலைவசல் பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது மனைவின் நடத்தை மீது சந்தேகமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் கோபமடைந்த அவரது மனைவி மற்றும் மகள் பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கும்  சென்ற மருதமுத்து தான் மறைத்து வைத்திருத பெட்ரோலை எடுத்து மனைவி மற்றும் மகளின் மீது ஊற்றி தீ வைத்தார்.

அப்பொழுது அருகில் இருந்த பக்கத்து வீட்டு பெண் திவ்யா மற்றும் அவரது 3 வயது மகள் மீது தீக்காயம் ஏற்பட்டது. 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments