பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி!- விருதாச்சலத்தில் வில்லேஜ் விஞ்ஞானிகள் கைது

0 6620

விருத்தாசலம் அருகே பறவைகளை வேட்டையாட யுடியூப் பார்த்து பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் அடிக்கடி வேட்டைக்கு செல்வதை பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளனர். காட்டுக்குள் வலை வைத்து, பொறி வைத்து பறவைகள் , சிறிய விலங்குகளை அவ்வப்போது பிடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் துப்பாக்கி வைத்து வேட்டையாடும் ஆசை இருவருக்கும் வந்துள்ளது. ஆனால், துப்பாக்கிக்கு எங்கே போவது?... உடனே இருவரும் யூடியூப் ஆசான் உதவியை நாடியுள்ளனர். அவரும் உதவி புரிய துப்பாக்கி செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொண்டனர்.

பின்னர், பி.வி.சி பைக் கொண்டே பிளாஸ்டிக்கில் துப்பாக்கி செய்துள்ளனர். துப்பாக்கியில் பயன்படுத்த தோட்டாவும் தயாரித்துள்ளனர். பிறகு, தாங்கள் தயாரித்த புதிய கண்டுபிடிப்பை பரிசோதித்து பார்க்க புதுப்பேட்டை காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அதற்குள், இளைஞர்களை மோப்பம் பிடித்து விட்ட ஆலடி போலீஸார் காட்டுக்குள் வைத்தே அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். போலீஸார் விசாரணையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக பிளாஸ்டிப் பைப் கொண்டு துப்பாக்கி தயாரித்ததாக இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். யுடியூப் பார்த்து சட்டத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments