ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி செலுத்தக்கோரிய நோட்டீஸை எதிர்த்து ரஜினி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

0 4708
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி செலுத்தக்கோரிய நோட்டீஸை எதிர்த்து ரஜினி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி கட்டக்கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து அதன் உரிமையாளரும், நடிகருமான  ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. 

கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ம் தேதி முதல் அந்த மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில்  6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  செலுத்த வேண்டும் என செப்டம்பர்10 ம் தேதி  மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனவும் கூறியுள்ள ரஜினிகாந்த், இந்த நோட்டீஸ் வைத்து சொத்துவரிக்கு அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments